இப்படி செய்தால் உனக்கு என் ரசிகராக இருக்க தகுதி இல்லை அஜித்
தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை, கவர்ந்தவர் அஜித். இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவருடன் நடிக்கும் பல பிரபலங்கள் சொல்லி கேட்டது உண்டு.
இவர் கடைசியாக நடித்த படம் விவேகம். இந்த படத்தை தொடர்ந்து, தற்போது அஜித் ஒப்பந்தமாகியுள்ள படம் விசுவாசம். அஜித் ரசிகர்கள் எப்போதும் நிறைய நல்ல விஷயங்களை செய்வாரைகள். அஜித் மகன், மகள் பிறந்த நாளிற்கு கூட பல நல்ல விஷயங்களை செய்து நிறைய மக்களுக்கு உதவியாக இருந்தார்கள்.
அஜித் ரசிகர்கள் எப்போதும் பொதுநலவாதிகளாக தான் இருப்பார்கள். அஜித்திற்கு அவரது ரசிகர்கள் சக நடிகர்களை கிண்டல் செய்தால் பிடிக்காதாம். அப்படி கிண்டல் செய்பவர்கள் என் ரசிகராக இருக்கும் தகுதியை இழக்கிறார் என்று கூறியுள்ளார் அஜித்.

Comments
Post a Comment