ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கொல்கத்தா அணி நட்சத்திர வீரர்

அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தென்னாப்ரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா இடையே நடைபெற்ற 4-வது டெஸ்ட்போட்டிக்குதயாராகயிற்சியில்ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவுஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்-க்கு திடீரென காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக மிட்செல் ஸ்டார்க் தென்னாப்ரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா பங்கேற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அவுஸ்திரேலிய அணித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் அடுத்த வாரம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து வலது காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஸ்டார்க் 11வது ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஊடகங்களிடம் அறிவித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிட்செல்ஸ் ஸ்டார்கை 9.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது இந்த சூழலில் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாடா விடில் கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.

Comments

Popular posts from this blog

‘හෝටලයෙන් එලවන්න‘ ඕස්ට්‍රේලියාව ගිනි ගනිද්දි වොනර් මහ රෑ පාටි දාලා, දැන් යකෙක් වගේලු - කුපිත වූ කැන්ගරු ක්‍රීඩකයෝ වට්ස්ඇප් ග්රූප් එකෙනුත් අයින් කරලා (PHOTOS)

ලොවම කතා වුන චමින්ද වාස් ග්‍රවුන්ඩ් එකෙන් මහ පාරටම ගහපු 6 පහර ලොවම කතා වුන දැකලා තියනවද (Video)

தோனியின் ஹெலிகொப்டர் சொட் TRAINING VIDEO