கண் இமைக்காமல் கணவர் டோனியை ரசித்த மனைவி: வைரல் புகைப்படம்
இந்தியாவில் ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றனஇந்த ஆண்டு, 3 பத்ம விபூஷன் விருதுகள், 9 பத்ம பூஷண் விருதுகள், 72 பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் இரண்டாம் கட்டமாக 42 பேருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன இதில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் டோனியும் ஒருவர்.
டோனிக்கு பத்ம பூஷண் விருதை குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இதை பெறுவதற்கு முன் டோனி இராணுவ உடையில் கம்பீரமாக நடந்து வந்து விருதினை பெற்றுக் கொண்டார்.
டோனிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருக்க, அவரது மனைவி சாக்ஷி தனது கணவரை ரசித்த காட்சியும் வைரலாகி வருகிறது.
தனது கணவர் ராணுவ உடையில் கம்பீரமாக நடந்துசெல்வதை, வரிசையில் அமர்ந்து அவரது மனைவி சாக்ஷி கண் இமைக்காமல் உதட்டோரப் புன்னைகையுடன் ரசித்துப்பார்த்தார்மஞ்சள் நிற புடவையில் வந்திருந்த அவரது புகைப்படதை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.









Comments
Post a Comment