தியேட்டர்கள் புது முடிவு - இனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
தற்போது தயாரிப்பாளர் சங்கம் புது படங்கள் ரிலீஸ் ஆகவிடாமல் தடை போட்டுள்ளது. தியேட்டர்கள் பழைய படங்கள் மற்றும் வேற்றுமொழி படங்களை திரையிட்டு வருகின்றன. அதனால் தியேட்டர்களுக்கு வரும் கூட்டம் முற்றிலும் குறைந்துவிட்டது.
அதனால் தியேட்டர்களின் வருமானம் முற்றிலும் குறைந்துவிட்டது. இந்நிலையில் வரும் 7ம்தேதி துவங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப அனுமதி கோரி போலீசிடம் தற்போது சில தியேட்டர் உரிமையாளர்கள் மனு அளித்துள்ளனர்.
அனுமதி வழங்கப்பட்டால் இனி கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பெரிய ஸ்கிரீனில் கிரிக்கெட் போட்டியை கண்டு மகிழலாம்.

Comments
Post a Comment