உடைந்த காலுடன் அஜித் செய்த விஷயம், ரசிகர்கள் பூரிப்பு
அஜித் தன் படங்களின் ப்ரோமோஷனுக்கு கூட ஒரு நாளும் வந்தது இல்லை. ஆனால், நடிகர் சங்கத்தில் எடுக்கும் எந்த ஒரு முடிவிற்கும் கட்டுப்பட்டு அதன்படி செயல்படுபவர்.
அந்த வகையில் அஜித் சில வருடங்களுக்கு முன்பு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்திய ஒரு உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துக்கொண்டார்.
நிறைய நடிகர் வந்தாலும், அஜித்திற்கு அப்போது கால் உடைந்து இருந்தது, அவரால் எழுந்து நடக்க கூட முடியாது.
அந்த சமயத்தில் கூட சங்கத்தில் அழைத்த ஒரே காரணத்திற்காக நாள் முழுவதும் சாப்பிடாமல் ஒரே இடத்தில் அமர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு சென்றார். இதைக்கண்ட ரசிகர்கள் அனைவரும் பூரிப்படைந்தனர்.

Comments
Post a Comment