அஜித் பற்றி இதுவரை வெளிவராத சுவாரசியமான உண்மை தகவல்!
சினிமாவில் சாதிக்க உழைப்பிருந்தால் போதாது தெய்வீக நம்பிக்கையும் தேவை. அப்படி சாதித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம், அதில் ஒருவர் நடிகர் அஜித்.
ரசிகர்கள் மட்டுமல்ல சினிமாவில் அவரை தேடி பல பேர் சுற்றுகின்றனர். ஆனால் அவரை பொது இடங்களில் அவ்வளவு எளிதாக பார்த்து விட முடியாது.
ஆனால் உடன் இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு இக்கட்டான நிலை என்றால் அவர்களின் தேவையை புரிந்து கொண்டு சத்தமில்லாமல் உதவியை செய்துவிடுவாராம்.
இந்நிலையில் அவரை பற்றி பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத ஒரு தகவலை பிரபல நடிகர் மைம் கோபி வெளியிட்டுள்ளார். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது என்பார்கள்.
அதுபோல தான் அஜித், மலேசிய மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். அந்த மக்களே என்னிடம் சொன்னார்கள். சென்னையில் வெள்ளம் வந்த போது வீடு, திருமண மண்டபம், முதியோர் இல்லம் என பல இடங்களை மக்கள் தங்குவதற்காக கொடுத்தார்.
இதுபோன்று அவர் செய்யும் நல்ல விசயங்கள் மக்களுக்கு தெரிவதில்லை என கூறியுள்ளார்.

Comments
Post a Comment